பொதுவாக “சோதனை” என்ற வார்த்தையை கேட்டாலே விசுவாசிகள் மத்தியில், ஏன் உலக மக்கள் மத்தியிலேயே கலக்கம் உண்டாகிறது. சோதனை ஏன் வருகிறது? எதற்காக வருகிறது? யார் அதை அனுமதிக்கிறது? என்று நாம் வகையறுத்து பார்த்ததோமானால் எளிதாக அதை மேற்க கொள்ளமுடியும்.

வேதாகமத்தில் அநேகர் சோதிக்கப்பட்டார்கள் என்று வாசிக்கிறோம்.

விசுவாசிகளாகிய நாமும் இந்த விஷயத்தில் ஒரு தெளிவு அடையவேண்டும்.
சோதனையை இரண்டாக பிரிக்கலாம்.

● ஆவிக்குரிய சிட்சை
● பாவத்தின் விளைவினால் வரும் சோதனை

ஆவிக்குரிய சிட்சை


ஆவிக்குரிய ரீதியாக வரும் பாடுகள் வேதனைகள் நிந்தைகள் எல்லாம் சோதனை என்று சொல்லுவது ஏற்புடையதாக இருக்காது.

ஏனென்றால் கிறிஸ்துவின் நிமித்தமாக நமக்கு வரும் பாடுகள் எல்லாம் சோதனைகள் அல்ல மாறாக சிட்சை . (பரீட்சை ) வேத ஆதாரமாக யாக்கோபு 1:13 ல் வாசிக்கறோம். எடுத்துகாட்டாக ஆபிரகாமை குறித்த பார்கலாம். தேவன் ஆபிரகாமை சோதித்தார். எதற்காக? அவருடைய விசுவாசம் எவ்வாறாக இருக்கிறது என்று பார்க்க. ஆங்கிலத்திலே சொல்லப்போனால் TEST. ஆகவே அது ஒரு பரீட்சை . ஆவிக்குரிய வாழ்வில் தேவன் இவ்வாறாக அநேக பரீட்சைகளை நமக்கும் அனுமதிப்பார். யோபு, அப்போஸ்தலனாகிய பவுல் ஆகியவர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள். மேற்கூறிய அனை வரும் ஒரு இடத்தில கூட தேவன்தான் எனக்கு இதை தந்தார், அவரால் தான் எனக்கு இத்தனை பாடுகள் இத்தனை வேதனைகள் என்று தேவனை குறைக்கூறவுமில்லை, பழி சுமத்தவுமில்லை. மாறாக எல்லாவற்றையும் தேவன் பார்த்துக்ககொள்வார் என்றே சந்தோசமாய் அதை ஏற்றுக்கொண்டார்கள்.

அடுத்த எடுத்துக்காட்டாக ஒன்றை கூட பார்க்கலாம்.

கடந்த 2 வருடங்களாக கொரோனா என்ற கொடிய வியாதி நம்மை ஆட்கொண்டது. அதில் அநேகர் பாதிக்கப்பட்டு மரித்தும் போனார்கள்.

அதில நம் தேவப்பிள்ளைகளும் அடங்குவர். இங்கே தான் ஒரு மிக பெரிய பாடம் நமக்கு இருக்கிறது. அவ்விசுவாசிகளுக்கு நெருக்கமானவர்கள் இந்த வியாதியினால் மரித்துப்போயிருந்தாலும் அவர்கள் அதை நன்மைக்கே என்று தான் ஏற்றுக்கொண்டார்களே ஒழிய, தேவனை குறைக்கூறவோ குற்றப்படுத்தவோ இல்லை . தேவன் கொடுக்கும் சிட்சை ஆவிக்குரிய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கே ! மறுமையில் அவர்களை ஒரு நாள் நிச்சயமாக நாம் காண்போம் என்ற நம்பிக்கை தான் இன்றளவும் அவர்களின் விசுவாச ஓட்டத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

சான்று வசனம்

● பிலிப்பியர் 1 : 29

பாவத்தின் விளை வினால் வரும் சோதனை

இரண்டாவதாக நாம் பார்க்கபோகும் இந்த தலைப்பு தான் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகள். உலக மக்கள் பாடு அனுபவிக்கிறதற்கும் விசுவாசிகளாகிய நாம் பாடு அனுபவிக்கிறதற்கும் வித்தியாசங்கள் உண்டு. நாம் நீதிமானாக்கப்பட்டப் பின் அதாவது இரட்சிப்பு அடைந்த பிறகு பாவக்கிரியைகளை செய்து பாவத்தில் நிலை நிற்போமானால் அதற்கான விளைவை இந்த உலகத்தில் நிச்சயமாக அனுபவித்தே ஆக வேண்டும். ஆகவே அது தேவன் கொடுக்கும் சிட்சையோ சோதனையோ அல்ல மாறாக நம் பாவத்தினால் வரும் விளைவே .

எடுத்துக்காட்டாக சங்கீதக்காரனாகிய தாவீதை பார்ப்போம். தாவது ராஜா பட்சேபாளிடத்தில் பாவம் செய்தார் என்று நாம் அனைவரும் அறிவோம். அதோடு அவர் இராமல் அவர்களுடை ய கணவனாகிய உரியாவையும் கொலை செய்தார். ஆக ஒரு பாவத்தை மறைக்க இன்னொரு பாவம். இறுதியாக நாத்தான் தீர்க்கதரிசி எச்சரித்தப்போது தான் அவர், தான் செய்த பாவம் எவ்ளவு கொடியது என்று உணர்கிறார். சங்கீதம் 55-ல் பாவ அறிக்கையை நாம் பார்க்க முடியும். இதிலே கோவமாய் இருந்த தேவன், தாவது முறையிட்டு அறிக்கை செய்த உடன் மன்னித்தார் தான். ஆனால் அவர் செய்த பாவம் அவரையும் அவர் குமாரர்களையும் எவ்வளவாக ஆண்டதல்லவா? தாவீது எத்தனை பாடுகள் அவமானங்கள், தன் சொந்த குமாரன் மூலமாகவே எவ்வளவோ வேதனை கள்… இவை யாவும் அவர் செய்த பாவத்தின் விளைவுகளே ! ஆகவே திருஷ்டாந்தங்களாக சொல்லப்பட்ட இவை அனைத்தும் நம்முடைய வாழ்க்கைக்கு பெரிய பாடங்கள்.
தேவன் இரக்கமுள்ளவர் கிருபையுள்ளவர் அன்புள்ளவர் தான். ஆனால் பாவத்தை பார்த்துக்கொண்டு அவர் ஒருநாளும் சும்மா இருக்கமாட்டார்.

நம்முடைய இரட்சிப்பு, நிலையானது அதிலே ஒரு சந்தேகமும் இல்லை . ஆனால் மனம்திரும்பின பிறகும் பாவத்தில் நிலை நிற்போம் என்று சொன்னால் அதற்கான ஆக்கினை நமக்கு நிச்சயம் உண்டு. சந்தேகமே இல்லை . எனவே நாம் அஜாக்கிரதையாக ஒருநாளும் இருக்க வேண்டாம்.
ரோமர் 6 : 1 – 6 வரை பார்ப்போமானால் பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படி பிழைப்போம்? என்று எழுதியிருக்கிறது.


2 பேதுரு 2:21-22 வசனங்கள் எச்சரிப்பின் வசனங்களாக எடுத்துக்கொள்வோம்.
இவ்வுலக வாழ்வில் பாடுகள் வருவது யதார்த்தம். ஆனால் எதற்காக வருகிறது என்று சிந்தித்து மனம் தளராமல் அதை தேவ வல்லமையோடு மேற்கொள்ளக் கற்றுக்கொள்வோம். நாம் இரட்சிக்கப்பட்டுவிட்டோ ம் அதனால் சாத்தானால் நம்மை ஒன்றும் செய்ய இயலாது என்று நினைக்கக்கூடாது.

தேவபிள்ளைகளை தன் வலைக்குள் விழவைப்பதே அவன் முதல் நோக்கம். ஒருவேளை பாவம் செய்தோமானால் பாவத்தை மன்னிக்கிற பரிகாரியினிடத்தில் சரணடைவோம். பரிசுத்த ஜீவியம் வாழ தேவன் நம் அனைவருக்கும் வழிவாசல்களை திறந்து கொடுப்பார். ஆமென்!!
சான்று வசனங்கள்

● யாக்கோபு 1 :13 முதல் 16 வரை.