இன்று பல வாலிப சகோதரிகளின் விசுவாசத்தை சோதிக்கிற ஒரு விஷயம், தாமதமாகும் திருமணம் . உலக மக்களின் மனதில், திருமண வயதை தாண்டிய ஒரு நபரை பற்றி எழும்பும் பல தேவையில்லா சிந்தனை, தன்னை சுற்றி உள்ள சகோதரர்கள் நண்பர்களின் திருமணம் நடக்கிறதே! ஏன்? நான் மட்டும் விலக்கு என்ற கேள்வி, தேவனுக்கு நம்மேல் பிரியம்/இரக்கம் இல்லையோ என்ற குழப்பம், இவை அனைத்தும் ஒரு தனி நபரின் வாழ்வில் விசுவாச குறைச்சலை ஏற்படுத்தும்

Late for wedding / Hanna Shibu Jose(Tamil)

ஏசாயா 55:8 – இல் இவ்வாறாக ஆண்டவர் கூறியுள்ளார் “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்” ஆம் ! நம் நினைவுகளோ சிந்தனைகளோ அல்ல கர்த்தருடைய நினைவுகளும், சிந்தனைகளும் அவை சிறந்தவைகளாகவே காணப்படுகின்றன. நாம் கவலைப்படுகின்றதாலே நமக்கு என்ன பயன்? ஆண்டவர் நம்மை குறித்து ஒரு சித்தம் வைத்திருக்கிறார் அவர் குறித்த காலத்தில் தம் சித்தத்தை நம் வாழ்வில் விளங்கச்செய்வார்
திருமண வயதில் இருக்கும் ஒரு வாலிப சகோதரி பலவித சோதனைகளையும் கேள்விகளையும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கின்றனர். தன சுற்றத்தாரையும், உறவினர்களையும், சமூகத்தையும் , மற்றும் அவர்களின் கேள்விகளையும் சமாளிப்பதே ஒரு கடினமான வேலையாக உள்ளது. இவ்வாறு கேட்பவர்களின் வாயை நம்மால் அடக்க முடியது. அனால் நன்மையானதை மட்டும் கேட்பதற்குரிய காதுகளையும் ஞானமாக யோசிப்பதற்குரிய சிந்தனைகளையும் தேவன் நமக்கு தந்திருக்கிறார் ஆகையால் அவற்றை மனதில் எடுத்து கொள்ளாமல் தவிர்க்கலாம் யாக்கோபு 1:12 இல் கூறுவது போல “சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான்”

கர்த்தர் நமக்காக ஒரு பெரிய திட்டத்தை வைத்துள்ளார். நம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னமே அவர் நம்மை குறித்தான பல திட்டங்களும் சித்தமும் வைத்துள்ளார் நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் அவற்றை விளங்க செய்துள்ளார் “நம் மழலை பருவம் தொடங்கி மரிக்கும் தருணம் வரையிலும்” அவர் நம்முடனே கூடஇருந்து நமக்கு வேண்டியவைகளை சிறப்பாக செய்து வருகிறார் “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணி னவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” – I கொரிந்தியர் 2:9.

“மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம் ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்” – நீதிமொழிகள் 19:21. நம் வாழ்க்கை துணையை குறித்தான எண்ணங்களும் ஆசைகளும் இருக்கும் அனால் நாம் கர்த்தரிடத்தில் நம் வாழ்க்கை துணையை குறித்தும் நம் துணையை குறித்தும் ஜெபிக்க வேண்டிய காரியம் “யோசேப்பை போன்ற நீதிமானான புருஷன்” – மத்தேயு 1:19 நாம், “மரியாளை போன்ற கிருபை பெற்றவள்” – லூக்கா 1:28. எனவே நாம்ஆண்டவரிடம் ஜெபம் பண்ணும்போது யோசேப்பு மற்றும் மரியாளை போன்ற வாழ்க்கை அமைய விரும்புவோமாக.
பெற்றோர்களுக்கும் நம்மை குறித்ததான கவலை நாம் பிறக்கும் நாள் துவங்கி உள்ளது அவையின் உச்சக்கட்டம் நம் திருமணத்தை குறித்து தான். ஒரு குடும்ப முகாமில் செய்தி அளித்த ஒரு தேவா ஊழியர், அங்கு வந்திருந்த பெற்றோர்களுக்கு கூறியதாவது ” உங்கள் பிள்ளைகளின் திருமணம் 27 வயதில் தான் நடக்க வேண்டும் என்று தேவன் தீர்மானித்திருந்தால் அது 26-லும் அல்ல 28-லும் நடக்காது, 27 இல் தான் நடக்கும்” இவ்வாறு நாம் கவலைப்படாமல் நம் மனமகிழ்ச்சியின் மூலம் பெற்றோர்களை தேற்ற வேண்டும்

திருமணத்தை குறித்தான தேவனுடைய சித்தம் விளங்கும் வரையிலும் நாம் பொறுமையுடன் ஜெபத்தில் தரித்து காத்திருக்க வேண்டும் அவ்வாறு காத்திருக்கும் தருவாயில் நாம் நம் விசுவாசத்தில் நிலைத்து நிற்க நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களை தேவன் வேதத்தில் வசனத்தின் மூலமாக தெளிவாக காட்டியுள்ளார் அவற்றுள் 5 முக்கிய வசனங்கள்:

  1. என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். – எரேமியா 33:3
  2. நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ண ப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. எபிரேயர் 10:36
  3. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். சங்கீதம் 37:4
  4. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்ப ண்ணுவார். சங்கீதம் 37:5
  5. உன் இளமையைக்கு றித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. 1தீமோத்தேயு 4:12

எனவே, திருமணம் தாமதம் ஆனாலும் நாம் விசுவாசத்தில் நிலைத்து நிற்போம் “உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயி ராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது”. யாக்கோபு 1:3,4.

Written by

Hannah Shibu Jose

Hannah Shibu Jose