ஒரு நாள் திருமணத்திற்கு வரனை காண்பித்த பெண்ணின் பெற்றோரிடம் ஒரு குட்டி தேவாங்கு போல் இருக்கும் இவனா எனக்கு வரன்! என் தகுதி என்ன அவன் தகுதி என்ன என்றாள். இதை கேட்ட அந்த வரன் மிகவும் ஆத்திரம் உடையவனாய் அவளின் நாவை பிடுங்காமல் விடமாட்டேன் என்று சொல்லி அவளை கழுத்தில் வெட்டி கொலை செய்தானாம். அவளின் ஒரு வார்த்தை அவளின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி ஆனது.
வேதம் ஒவ்வொரு விசுவாசிகளும் மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும் எப்படி பேசக்கூடாது என்று கற்றுத் தருகிறது. சகோதரிகள் அதிகம் பேசுகிறவர்கள். “நீதிமொழிகள் 25:11 ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்”. தேவனுடைய பிள்ளைகளும் ஏற்ற சமையத்தில் சரியானதை பேச வேண்டும் அதற்கு வேதத்தில் நிறைய உதாரணங்களை பார்க்கிறோம்.
1 சாமுவேல் 25 வது அதிகாரத்தில் சரியான நேரத்தில் சரியானதை பேசின அபிகாயில் என்ற ஒரு பெண்மணியாரைப் பார்க்க முடியும். அவர் தனக்கும் தன்னுடைய கணவனாருக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் நிகழப்போகும் அழிவை புரிந்து கொண்டவர்களாய் சரியான நேரத்தில் சரியானவைகளை பேசியததினால் தானும் தன்னுடைய குடும்பமும் காக்கப்படவும் அவள் ஒரு ராஜாவின் மனைவியாக திகழ்ந்தார்.
எல்லாவற்றிற்கும் நமக்கு மாதிரியாய் திகழ்கிற நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய இகலோக வாழ்க்கையில் தான் ஊழியம் செய்யும்போது சமாரியா பெண்மணியார் தண்ணீர் மொள்ள வந்த போது சரியான நேரத்தில் சரியானவைகளை பேசுனததினால் அவர்களும் அவர்களோடு சேர்ந்து அநேகர் அந்த கிராமத்தில் கிறிஸ்துவை இயேசுவை விசுவாசிக்க நேர்ந்தது, அது மட்டுமல்ல தன்னுடைய வாழ்க்கையிலும் சிலுவை மரணத்திலும் உயிர்த்தெழுதலிலும் சரியான காரியத்தை சரியான நேரத்தில் பேசின நம்முடைய இரட்சகரை நமக்கு பார்க்க முடியும்.
இப்படிப்பட்ட மாதிரிகள் ஏராளம். இவர்கள் சரியான நேரத்தில் சரியானவைகளை பேசினபடியினால் ஒரு வெள்ளி பாத்திரத்தில் ஒரு பொன்னினால் செய்யப்பட்ட பழத்தின் ஒளி எப்படி இருக்குமோ அவ்வளவு ஒளி கொடுக்கிறவர்களாய் இருந்தார்கள்.
இன்றும் விசுவாச சகோதரிகளான நாம் கொலேசியர் 4:6 ன் படி “உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருத்தினதாயும் உப்பால் சாரமேறினதுமாய் இருப்பதாக” வார்த்தைகள் எப்போதுமே மற்றவர்களுக்கு ருசியை கொடுப்பதாகவும் வெளிச்சத்தை கொடுப்பதாகவும் காணப்பட வேண்டும் அப்படிப்பட்ட வார்த்தைகளையே பேச வாஞ்சிப்போம்.