Aavikkuriya Nerukkadi / Sunija Gold(Tamil)

இந்த உலகில் எல்லா விதமான நிலைமையிலும் மிகவும் நெருக்கடியின் மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம். குறிப்பாக பொருளாதார நெருக்கடி, சமுதாய நெருக்கடி, குடும்பங்களில் அன்றாடம் நாம் சந்தித்து வரும் நெருக்கடிகள். இவற்றை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். மனிதர்கள் இழப்புகளையும், பலவிதமான இன்னல்களையும் அடைந்து வருகிறார்கள் இந்த நெருக்கடிகள் நமக்கு ஆவிக்குரிய நிலைமமைலும் நெருக்கடியை தந்து வருகிறது.

ஆவிக்குரிய நெருக்கடியை உருவாக்கும் சில காரணங்களையும் அவற்றை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான வழிமுறைகளையும் பற்றி நாம் சிந்திக்கலாம்.

  1. சுயத்தை சார்ந்து கொள்ளுதல்

சுயத்திலும் தங்களுடைய பணத்திலும் சார்ந்து வாழக்கூடிய அநேக கிறிஸ்தவர்களை நாம் பார்க்கமுடியும் தாவீது அரசன் தன்னுடைய ஜனங்களை தொகையிட வேண்டும் என்று தீர்மானித்தார் அதை செய்யவும் உத்தரவிட்டார். ஆனால் அது அவருக்கும் ஜனங்களுக்கு பேரழிவை தந்தது. யோனா தனது சொந்த தீர்மானத்தின்படி நினிவேயை தவிர்த்து தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து தர்ஷஷுக்கு கப்பல் ஏறினார்.விளைவு,பல நஷ்டங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்தார். பிலேயாம் தீர்க்கதரிசி பொருளாசைக்கு உட்பட்டு தனது சுயத்தை சார்ந்து செயல்பட்டதால் சபிக்கப்பட்டவனா னான். இன்னும் இப்படிப்பட்ட எத்தனையோ எடுத்துக்காட்டுகளை வேதாகமம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

இன்றைக்கும் கிறிஸ்துவின் நாமம் தரித்த அநேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தேவனை சார்ந்து இருப்பதை விட்டு தங்களின் சுயத்தை சார்ந்து உலகஇச்சை களுக்கும் பொருள் ஆசைக்கும் இடம் கொடுத்து வாழ்வதே நாம் காண்கிறோம். இதைக்குறித்து பவுல் ” பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது”(1தீ மோத்தி 6:10) எனக் கூறியுள்ளார். சாலமோன் ஞானியும் “ஐஸ்வர்யவான் ஆக வேண்டுமென்று பிரயாசைப் படாதே, சுய புத்தியை சாராதே” என்று நீதிமொழிகள் 23 :4 கூறியுள்ளார் இப்படி வேதம் நமக்கு கற்றுத் தருகிறது.

2. கீழ்படியாமை

எல்லா காலகட்டத்திலும் நெருக்கடிகளை மனிதர்கள் தங்களின் கீழ்படியாமை மூலமே அடைந்து வருகின்றார்கள்.

இது ஆதி மனிதனாகிய ஆதாம் மூலமே ஆரம்பமாகிறது. ஆதாம் தேவனுக்கு கீழ்படியாத தால்தான் எல்லாம் மனுஷரும் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளானார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்கு முன்பாக கீழ்ப்படிவோம் என்று வாக்குறுதி அளிக்கிறதை பின்வரும் வசனங்கள் மூலம் அறிகிறோம். யாத்திராகமம் 24: 7 யோசுவா 24: 24. ஆனால் அந்த வாக்குறுதியை மீறியதால் கீழ்ப்படியாமையின் பிள்ளைகளானார்கள். யோனா தனது கீழ்ப்படியாமையினால் தேவ கட்டளையை மீறி நினிவேப் பட்டணத்திற்கு எதிராக கப்பல் ஏறியதைப் போல் இன்னும் அநேகரை கீழ் ப்படியாதவர்களாய் வேத புத்தகத்தில் காணலாம். ஆனால் நமது இரட்சகர் பெரும்பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கீழ்ப்படிந்து வெற்றிகண்டார் என்பதை நமக்கு மிகச் சிறந்த மாதிரியாய் இருக்கிறது. அவர் “சிலுவையில் மரணபரியந்தம் கீழ்ப்படிந்த வராய் தம்மைத்தாமே தாழ்த்தினார்”(பிலிப் பியர் 2:8). கிறிஸ்துவினுடைய கீழ்ப்படிதலே, கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாகிய நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றினது. ஆவிக்குரிய நெருக்கடிகளை கீழ்ப்படிதலின் மூலம் வெற்றி கொள்வோம்.

வேத வசனம் பிள்ளைகள் பெற்றா ருக்கும், வேலைக்காரர்கள் தங்களின் எஜமான்களுக்கு இன்னும் யாரெல்லாம் யாருக்கெல்லாம் கீழ்ப்படிய வேண்டும் என்று கற்றுத் தருகிறது. தேவ பிள்ளைகள் ஒருவரோடொருவர் நேரடி தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருப்பதால் நாம் எச்சரிக்கையாக இருப்போம்.

3. வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள்

ஆவிக்குரிய நெருக்கடிக்கு மிக முக்கிய காரணமாக அமைவது அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளே அதுவும் இப்பொழுது நாம் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் விசுவாசிகள் சந்தித்து வரும் பிரச்சினைகள் ஏராளம். விசுவாசிகள் தங்களது அன்பானவர்களை இழந்து, வேலைகளை இழந்து, எல்லாவிதத்திலும் உள்ள வாழ்வாதாரங்களையும் இழக்க நேரிட்டுள்ளது. இன்னும் சிலர் நோய்வாய் படுக்கையில் காணப்படுகின்றனர், இதுவே அவர்கள் தேவனை தூஷிக்கிறதற்கும் விசுவாச வாழ்க்கையின் பின்வாங்குதலுக்கு காரணங்களாகின்றன.

நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதிருங்கள் என்று பிலிப்பியர் 4:6 சொல்லப்பட்ட தேவனுடைய வார்த்தையை மறந்து விடுகிறவர்களாய் அல்லவா நாம் இருக்கிறோம்?. ஆம் ஜீவனுக்காக நாம் கவலைப்பட தேவையில்லை. (மத்தேயு 6:25), மேலும் கவலைப்படுகிறதினால் சரீர அளவோடு ஒருமுழத்தைக் கூட்ட முடியுமா ? (மத்தேயு 6: 27)- கவலைப்படுகிறவர்களைப் பார்த்து தேவன் கேட்கிறார். நாம் எல்லாரும் விசேஷித்தவர்கள் விசேசவிதமாய் தேவன் நம்மை ஆசிர்வதித்திருக்கிறார். பேதுரு கூட தனது நிருபத்தில் “உங்கள் கவலைகளைஎல்லாம் அவர் மீது வைத்துவிடுங்கள் (1 பேதுரு 5:7) என்று கூறியுள்ளார். பயப்படாதே என்று கர்த்தர் 365 தடவை தமது வேதபுத்தகத்தில் நமக்காகவே எழுதிவைத்துள்ளார். அவர் நம்முடனே இருக்கிறார். நாம் கவலைப்படுவதினால் எவ்விதமான பயனுமில்லை.

நெருக்கடியை மேற்கொள்ளும் விதம்

ஆவிக்குரிய வாழ்வில் ஏற்படும் ஆவிக்குரிய நெருக்கடிகளை மேற்கொள்ள வேண்டிய சில வழி முறைகளை பார்க்கலாம்.

  1. தேவனை வாஞ்சித்தல்

சங்கீதம் 42 :1 ” “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது” என நாம் பார்க்கிறோம். தாவீது அரசன் தனது மாமனார் சவுல், மகன் மற்றும் பெலிஸ்தியர் போன்ற தன்னுடைய எதிரிகளிடம் இருந்து வந்த எத்தனையோ நெருக்கடியான நேரங்களில், தாவீது தன்னை கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொண்டதை பார்க்கிறோம் (1 Sam.30:6). அவர் பாவத்தில் விழுந்தபோது தேவனிடம் ஒப்புரவாகி தேவனை தேடும்படி வாஞ்சிக்கிறதை காணமுடியும். கர்த்தருடைய மகிமை தங்கிய சமூகத்தில் இருப்பதையும், அவருடைய கற்பனைகளையும் வாஞ்சிக்கிறதையும் சங்கீதம் 26 :8 வாசிக்கிறோம். ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் நெருக்கடிகள் வரும்போது கர்த்தரை வாஞ்சிக்கிறவனாகவும் அதுமட்டுமே அவனது நோக்கமாகவும் இருக்க வேண்டும்.

தானியேல் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியான வேளையில் தேவ சமூகத்தில் இருப்பதே நாடினார், அதுவே சிங்கங்களின் வாயை கட்டியது. பெரும் நெருக்கடியான நிலையிலும் பவுலையும் சீலாவையும் சிறைச்சாலையில் கர்த்தரை துதித்து பாடச் செய்தது அவர்கள் தேவ சமூகத்தில் இருந்ததே காரணமாகும். இப்படியாக அவர்கள் நெருக்கடியை மேற்கொண்டனர். இன்று விசுவாசிகள் சந்திக்கும் எல்லாவிதமான நெருக்கடிகளையும் தேவனையும் அவருடைய வசனத்தையும் வாஞ்சித்து அவருடைய சமூகத்தில் இருந்தே இந்த நெருக்கடிகளை மேற்கொள்ளலாம்.

2. மாய் மாலத்தைத் தவிர்க்கவும்

இன்றைய நாட்களில் கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் தங்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் முகமூடி அணிந்தவர்களாய் காணப்படுகின்றனர். அனனியாவும் சப்பிராவும் தங்களைப் பக்தி உள்ளவர்களாக காண்பிக்க தேவ சமூகத்தில் பொய் சொன்னார்கள் (அப்போஸ்தலர் 5:6). ஒரு தேவனுடைய பிள்ளை தன்னிடம் இல்லாததை வெளிக்காட்டுவதை தேவன் வெறுக்கிறார். அவர்கள் உடனடியாக தேவனிடம் தண்டனைப் பெற்றார்கள். “தேவன் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார்”, இதை ஒருபோதும் நாம் மறந்துவிடக்கூடாது. தேவ சமூகத்தில் மாய்மாலம் பண்ணாமல் உண்மையான நிலையில் காணப்படு வதே தேவனுக்குப் பிரியம். தேவன் இதயங்களை ஆராய்ந்து அறிந்திருக்கிறார் மாய்மாலம் பண்ணாமல் நெருக்கடிகளை மேற்கொள்வோம்.

3. சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்ளுதல்

ஆவிக்குரிய பிரச்சினைகளை மேற்கொள்வதற்காக தேவனால் கொடுக்கப்பட்ட பேராயுதம்தான் சர்வாயுதவர்க்கம் (எபேசியர் 6: 11 -18). ஒரு போர் வீரன் அணியும் போர் ஆடையை போல சர்வாயுதவர்க்கத்தைத் தரித்தவர்களாயி காணப்பட வேண்டும். அத்தகைய ஆடை எப்படிப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்தியம் என்னும் கச்சை: மற்ற எல்லா ஆயுதத்தையும் தாங்கும்.
மார்க் கவசம்: நமது இருதயத்தை கிறிஸ்துவினுடைய நீதியால் காக்கப்படும்படி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆயத்தம் எனும் பாதரட்சை தேவனுடைய வழிநடத்துதலுக்கு எப்போதும் ஆயத்தமாக இருக்கும்படி கொடுக்கப்பட்டுள்ளது . விசுவாசம் என்னும் கேடயம் சாத்தானுடைய எல்லா அக்கினி அஸ்திரங்களையும் அவித்து போடும் படும்படியாக (எபேசியர் 6: 16) கொடுக்கப்பட்டிருக்கிற து, இரட்சணியம் என்னும் தலைசீராவை ஒரு சரீரத்தின் மிக முக்கியமான பகுதியை பாதுகாக்கும் படியாக தலைசிரா கொடுக்கப்பட்டுள்ளது.

தெய்வ வசனமாகிய பட்டயம் வேத(எபேசியர் 4 :12). வசனம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்றும் பாதைக்கு வெளிச்சமாகவும் சொல்லப்பட்டுள்ளது சங்கீதம் 119: 105. இந்த சர்வாயுதவர்க்கத்தைத்

தரித்தவர்களாய் ஜெபத்தில் மூழ்கியவர்களாய் காணுதல் நலம். இவைகளை நாம் நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தும் போதுதான் ஆவிக்குரிய நெருக்கடிகளை மேற்கொள்ள முடியும். கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக.